இமாம் ஷாஃபி பள்ளி - அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணாக்கர்கள்




அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்..)மெட்ரிகுலேசன் பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கல்வியார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் செயல்முறை கண்காட்சிக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.


அவ்வகையில்,மாணாக்கர்கள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனையையும் கலந்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளையும், மாணாக்கர்களின் பெற்றோர்களையும் வியக்க வைத்துள்ளனர். இதுகுறித்த காணொளி தொகுப்பை நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தாளாளர் ஹாஜி.M.S.தாஜூதீன் மற்றும் பேரா.பரகத் மற்றும் ஆசிரியர்களது தொடர் ஊக்குவிப்பு காரணமாக, மாணாக்கர்களால் இத்தகைய படைப்புகளை உருவாக்கி, அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரைவாசிகளின் கனவான 2014-15 ஆம் கல்வி ஆண்டுக்குள் மாநிலளவிலான கல்வி சாதனையாளர்கள் உருவாகும் சூழல் உள்ளதாகவே தெரிகிறது

மாணாக்கர்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிக்காட்ட வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகம், ஊக்குவித்த பெற்றோர்கள், கலந்து கொண்ட மாணவ-மாணவிகளை அதிரை எக்ஸ்பிரஸ் மனமாற பாராட்டுகிறது.

ஏனைய பள்ளிகளும் இத்தகைய அறிவியல் கைவினைக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தால் வருங்கால சாதனையாளர்கள் பலர் உருவாகும் வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!