இரு தெருக்களை அதிரையில் இணைப்பது தொடர்பாக

தமிழ்நாடு அரசு வாக்களித்தப்படி தமிழக மக்களுக்கு வழங்கும் இலவச வெள்ளாடு, செம்மறி ஆடு வழங்கும் திட்டம் தற்பொழுது அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரையில் 26-01-2012 அன்று ஊராட்சி மன்றக்கூட்டத்தில்
இது சம்மந்தமாக பேசப்பட்டது. இக்கூட்டத்தில் ஆதம்நகர் மற்றும் பிலால் நகரை இரு ஜமாத்தார்களும் கலந்துகொண்டு ஏரிப்புரக்கரைக்குட்பட்ட இந்த இரு தெருக்களையும் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சேர்ப்பதற்கு மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு மருத்துவர் கொண்டு வெள்ளாடு/செம்மறி ஆடு பெறுவதற்கான தகுதிகளையும் விதிமுறைகளையும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மலைஅய்யன் அவர்கள் மற்றும் ஜெயமாலா முத்துகிருஷ்ணன் அவர்கள் மக்களுக்கு விளக்கமளித்தார்கள்.இதில் ஆதம் நகரைச் சேர்ந்த சேக், பாட்சா, அமானுல்லா, பாவாபகுருதீன், வாப்பு மரைக்காயர் சிராஜீதின், கமாலுதின் போன்ற முக்கியஸ்தர்கள் தங்களுடைய பங்களிப்பையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள். ஆதம் நகருக்கு தண்ணீர் தொட்டி கட்டிக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், பிலால் நகருக்கு சாலைவசதிகள் செய்து தருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!