ரேஷன் கார்டை புதுப்பிக்க பிப்ரவரி 28 கடைசித் தேதி

சென்னை: வேலைக்கு செல்பவர்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க வசதியாக, 4 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்ற அரசின் அறிவிப்பு நாளை மறுதினம் முடிகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு புதிய கார்டு வழங்கப்பட்டது. இது 2009ம் ஆண்டுடன் முடிந்தது. எனினும், பழைய கார்டில் உள்தாள் இணைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்துடன் அதுவும் முடிந்துவிட்டது.


அதே நேரத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணி நடக்கவில்லை. போலி கார்டுகளை ஒழிக்க, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த பணி முடிய கால அவகாசம் தேவைப்படுவதால், பழைய ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ரேஷன் கார்டில் உள்ள காலி பக்கத்தில் 2012ம் ஆண்டுக்கான சீல் போடப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டை புதுப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் பகலில் வேலைக்கு சென்றுவிடுவதால் கார்டை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக ஜனவரி 22, 29 பிப்ரவரி 5, 12 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளை திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால், அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் ரேஷன் கார்டுகளை சிரமமின்றி புதுப்பித்து வந்தனர்.
இந்நிலையில், அரசு அறிவிப்புபடி நாளை மறுதினம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை திறந்திருக்கும். அதன்பின் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. எனவே, இதுவரை கார்டை புதுப்பிக்காதவர்கள் உடனே புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!