இனி ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கலாம்!!

University

ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கும் திட் டத்தை அடுத்த கல்வி யாண்டில் இருந்து அமல் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் ஒரு பாடப்பிரிவை படிக்கும் படிக்கும் மாணவர்கள், அதே காலக்கட்டத்தில் மற்றொரு படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
கல்வித் தகுதியும், அறிவை வளர்த்து கொள்வதிலும், அதிகம் படிக்கும் விருப்பமும் உள்ள மாணவர்களுக்கு இது பெரிய தடையாக உள்ளது.
இதுபோன்ற குறையை போக்க, ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகத்தில் படிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
இது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அதே கல்வியாண்டில் வேறொரு பல்கலைக் கழகத்திலும் படிக்கும் திட்டத்தால் (மெட்டா & யுனிவர்சிட்டி) அதிக பயன் பெறுவார்கள்.
உதாரணத்துக்கு, கான்பூர் ஐஐடி.யில் படிக்கும் மாணவர், அதே நேரத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பண்டைய வரலாறு பாடத்தையோ அல்லது இந்திய மருத்துவ கல்வி நிலையத்தில் கணிதத்தையோ படிக்க முடியும்.
இதற்காக, நாடு முழுவதும் 31 ஆயிரம் கல்லூரிகளும், 6400 பல்கலைக் கழகங்களும் அடுத்த 6 மாதங்களில் இணைக்கப்படும்’’ என்றார்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!