தேர்வு வழிகாட்டி – தொடர் 3 – “புத்திசாலி மாணவர் Vs சராசரி மாணவர்”

எந்த ஒரு பள்ளியிலும் அல்லது கல்லூரியிலும் உள்ள மாணவர்களை 4 வகைகளாக பிரிக்கலாம்.

1. அதிக மதிப்பெண்களை பெறும் புத்திசாலி மாணவர்கள்
2. அதிக மதிப்பெண்களை பெறத் தவறிடும் புத்திசாலி மாணவர்கள்
3. அதிக மதிப்பெண்களை பெறும் சராசரி மாணவர்கள்
4. அதிக மதிப்பெண்களை பெறத் தவறிடும் சராசரி மாணவர்கள்
மாணவர்கள் பெருவாரியாக அவர்களின் மதிப்பெண்களைப் பொறுத்தே மதிக்கப்படுகிறார்கள். நல்ல மதிப்பெண்களை பெறுபவர் புத்திசாலி என்றும், குறைந்த மதிப்பெண்களை பெறுபவர் சராசரி மாணவர் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்திசாலியான மாணவர் யார்? சராசரி மாணவர் யார்?

புத்திசாலியான மாணவர் யார்?

  • தன் மூளைத்திறனை அதிகமாக பயன்படுத்துபவர்
  • பாடத்தை முழுமையாக படித்திருப்பவர்
  • பாடத்தை விரைவில் உள்வாங்கிக்கொண்டு புரிந்து கொள்ளக் கூடியவர்
  • சூழ்நிலைக்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் மாணவர்
  • தனித்தன்மையுடன் சிந்திக்கக்கூடியவர்
  • விரைவில் செயல்படக்கூடியவர்
  • அதிக ஊக்கமுடையவர்
  • சவால்களை எதிர் கொள்ள விரும்புபவர்!!

சராசரி மாணவர் யார்?

மாணவர்கள் அனைவருக்கும் மூளைத்திறன் ஒரே அளவுதான். அதனைப் பயன்படுத்துவதில்தான் வேறுபாடு இருக்கிறது. அதிகமாக பயன்படுத்துபவர் புத்திசாலியாகவும், குறைவாகப் பயன்படுத்துபவர் சராசரி மாணவராகவும் ஆகின்றனர்.
மூளைத்திறனை முழுமையாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் சராசரி மாணவரும் புத்திசாலி மாணவராக மாற முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.. நமது கல்விகளஞ்சியத்தின் நோக்கமும் அதுவே!! – இந்த தேர்வு வழிகாட்டி மூலம் முன்னேற துடிக்கும் மாணவர்கள் நிச்சயமாக பயன் பெறுவார்கள்!!


வழிகாட்டி தொடரும்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!