ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி : ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம். மார்ச் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
ரயில்களில் வெளியூர் செல்வோர் இப்போது 90 நாட்களுக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு
செய்யலாம். ஆனால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இனி 90 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. மார்ச் மாதம் 10ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி மார்ச் 10 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 4 மாதங்கள் முன்னதாகவே பயணிகள் தங்கள் பயண திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். மேலும், திருவிழா மற்றும் கோடைக்காலங்களில் பயணம் செல்வோருக்கும் இந்த முறை உதவியாக இருக்கும்’’ என்றார்.

ஏற்கனவே, ரயில் பயணிகளின் வசதிக்காகவும், முறைகேடுகளை தவிர்க்கவும் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாக ரயில்வே சமீபத்தில் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!