அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை.

சட்டசபையில் இன்று துரைக்கண்ணு (அ.தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் முகம்மதுஜான் அளித்த பதில் வருமாறு:- ஹஜ் பயணம் செல்ல அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்றால் சவூதி அரேபியா அரசு கூடுதல் இடம் தந்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். முன்பு தமிழ்நாட்டில் இருந்து 2,612 பேர்தான் ஹஜ் பயணம் சென்றனர். தற்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டதால், கூடுதலாக 1,472 பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி கிடைத்தது.
அடுத்து கேள்வி எழுப்பிய ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), மராட்டியம், கேரள மாநிலங்களில் ஹஜ் பயணிகள் செல்வதற்கு முன்பு, அவர்கள் தங்குவதற்கு அரசு ஹவுஸ் உள்ளது. ஆனால் சென்னையில் தனியார் இடங்களில்தான் தங்க வேண்டியிருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் அரசு ஹவுஸ் கட்டப்படுமா? என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘அது குறித்து பரிசீலனை செய்யப்படும்’என்ரார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!