புதிய ரேஷன் கடைக்கு பிலால் நகர் சார்பாக நிலம் ஒதுக்கீடு !


அதிரை கிழத்தெரு முஹல்லவிற்க்கு உட்பட்ட   ஹஜரத் பிலால் நகரில்ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு மக்கள்கள் வசிக்கிரார்கள். இப்பகுதியில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.






இப்பகுதியில் ரேஷன்கடை இல்லாத காரணத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அங்காடியில் அனைவரும் பொருள்கள் வாங்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதால், மிகவும் சிரமத்துக்குள்ளாகின்ற இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு“ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்” நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ரேஷன்கடை அமைப்பதற்கு அரசுக்கு வழங்குவது என தீர்மானம் செய்து, சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோர்களிடம் “ஹஜரத் பிலால் ( ரலி ) நகர் ஜமாத்”சார்பாக கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட மற்றும் வட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு ( DSO மற்றும் TSO ) அனுப்பி ஆவணம் செய்ய அவர்களை கேட்டுக்கொண்டார்கள்.

நன்றி : அதிரைப்ரஸ் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!