பயணிகள் வசதிக்கு தனி பக்கம் : ரயிலில் காலியிடங்கள் பேஸ்புக்கில் பார்க்கலாம்


புகழ்பெற்ற சமூக இணைப்பு இணையதளமான பேஸ்புக்கில் ரயில்வே இணைந்துள்ளது. அதன் பக்கங்களில் ரயிலில் காலியிடங்கள், ரயில் நேரம் போன்ற தகவல்களை அறியலாம். இதுபற்றி டெல்லி மண்டல ரயில்வே உயரதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பயணிகளின் வசதிக்காக ரயில்வே இணைய தளம், ஐஆர்சிடிசி இணைய தளம் ஆகியவை ஏற்கனவே இருக்கின்றன. எனினும், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் ரயில்வே இணைந்துள்ளது.

பேஸ்புக் இணைய தளத்தில் இந்திய ரயில்வே என்ற பெயரில் பக்கத்தை திறந்து ரயில் டிக்கெட் காலியிடங்கள், ரயில் வருகை, புறப்பாடு ஆகியவற்றை அறியலாம். விரைவில் தகவல் அளிக்கும் வகையில் அந்த பக்கத்தை தேசிய ரயில் விசாரணை சேவையுடன் இணைத்துள்ளோம். எனவே, தகவல்களை உடனுக்குடன் பேஸ்புக் பக்கத்தில் காண முடியும்.

ரயில்களில் காலியிடங்களை தவறான வழியில் மோசடி பேர்வழிகள் பயன்படுத்தாமல் தடுக்க இது உதவும். எனவே, உடனுக்குடன் காலியிடங்கள் பற்றிய விவரத்தை வெளியிட மண்டல ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த வசதி பற்றி ரயில் நிலையங்களில் விளம்பரம் செய்யவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!