டீசல், கேஸ் விலை உயர்கிறது!!!

ஈரான் பிரச்னையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையுடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இங்கிலாந்து பிரான்ஸ் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் அதிரடியாக நிறுத்தியது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.5 வரை இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப்பின் மார்ச் முதல் வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயரும் என தகவல் வெளியானது. தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்திருப்பதால் லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்க கூடும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் சிலர் நேற்று தெரிவித்தனர்.

அதேசமயம் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.14ம் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.390ம் இழப்பு ஏற்படுகிறது. இதை ஓரளவு சரிகட்டும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!