அதிரையில் தொடரும் பனி மூட்டம்


அதிரையில் கடந்த சில நாள்களாகவே அதிகாலை நேரங்களில் கூடுதல் பனி மூட்டங்களுடன் இருளாக காட்சியளிக்கிறது.இதனால் காலையில் தொழில் செய்யும் பால் வியாபாரிகள், பேப்பர் கடைக்காரர்கள், கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள்.


பனி மூட்டம் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் எடுத்துச்செல்லும் ஆட்டோக்கள் சாலைகளில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது.

வளி மண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்தால் கடும் பனி மூட்டம் அதிரையில் மட்டும் இன்றி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், தமிழ் நாட்டின் பல பகுதியிலும் காலை 10 மணி வரை நீடிப்பதால் உள்ளூர் வெளியூர் விமான சேவைகள், ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் பல பகுதிகளில் காலை 9 மணியளவில் சூரியன் நிலவு போல் காட்சியளித்தது.








0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!