உங்கள் குழந்தையின் அறிவுத்திறனை அதிகப்படுத்த சில விஷயங்கள்…..

தங்களுடைய குழந்தைகள் புத்திசாலிகளாகவும், நுண்ணறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. அதற்காக நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருப்பீர்கள். இந்த கட்டுரையின் மூலம் உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட கல்வி களஞ்சியம் சில தகவல்களை கூற விரும்புகிறது. பல்வேறு  நிபுணர்களால் கூறப்பட்ட கீழ்க்காணும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் உங்கள் குழந்தைகளும் அறிவாளிகளாக மாறுவார்கள்.


அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்:
குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனை திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம். அவர்கள் யோசித்து விளையாடும் விளையாட்டுச் சாமான்களை வாங்கித்தராலாம் என்பது குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனையாகும். குறுக்கெழுத்துப்போட்டி, எண் விளையாட்டு போன்றவை குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும். கம்ப்யூட்டரில் QUIZ போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

தாய்ப்பால் அவசியம்:
9 மாதம் வரை தாய்ப்பால் அருந்தும் குந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வேண்டுமெனில் ஒரு வருடம் வரை கூட தாய்ப்பால் தரலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஊட்டச்சத்து மிக்க உணவு: 
குழந்தைகளின் உடல் நலனிற்கும் கற்கும் திறனுக்கும் அதிக தொடர்பு இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கிரகிக்கும் திறன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு கண்டிப்பாக கொடுக்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் பள்ளி செல்லும் அவசரத்தில் அவர்களின் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர் எனவே குழந்தைகளுக்கு காலை உணவோடு ஒரு டம்ளர் பால் கொடுப்பது மூளை வளர்ச்சியை அதிகரித்து அவர்களை உற்சாகப்படுத்தும்.

வெளி உணவுகளால் ஆபத்து: 
பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தருவது அவர்களின் புத்திக்கூர்மையை மழுங்கடிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அது போல வெளியில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளால் உங்கள் குழந்தைகளின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அறிவுத்திறனையும் பாதிக்கிறது.  எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

படிக்கும் முறை: 
குழந்தைகளின் வாசிக்கும் திறனை ஊக்கப்படுத்தவேண்டும். இது அவர்களின் ஐ க்யூ அதிகரிக்கும் முக்கிய வழிகளில் ஒன்றாகும். எனவே சிறிய லைப்ரரி ஒன்றை உருவாக்கி அதில் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கித்தரலாம். அது அவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். முடிந்தவரை மனப்பாடம் செய்யாமல் விசயங்களை புரியும்படி படிக்க வேண்டும். பெற்றோர் முதலில் படித்து கருத்தை குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். அல்லது திறமை மிக்க ஆசிரியரை தேர்வு செய்து Tuition மூலம் கற்பிக்கலாம்.



காலை உணவு:

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!