கம்பன் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்ககோரி வழக்கு!

சென்னையிலிருந்து காரைக்குடி வரை சென்று வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து கடந்த சில வருடங்களாக நிறுத்தப் பட்டு அந்த பகுதி மக்கள் சென்னைக்கு ரயில் போக்குவரத்து இல்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன்ர் இதனால் அந்த பகுதி மக்கள் சார்பாக அதிராம்பட்டினத்தை சார்ந்த மக்கள் சார்பில் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் போடப் பட்டுள்ளது.

அதில் கூறப் பட்டுள்ளதாவது;
"சென்னை- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப் பட்டு வந்தது. இந்த ரெயிலானது மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந் தாங்கி, மார்க்கமாக இயக்கப் பட்டது. மயிலாடுதுறை- காரைக் குடி இடையே அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்காக 2006-ல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரயில்பாதைக்கான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டும் இன்னும் பணி முடியவில்லை. இதனால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயல், இயற்கை நீதிக்கு புறம்பானது. எனவே மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில் பாதை மாற்றும் பணியை விரைவாக செயல்படுத்தி முடித்து அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இதுகுறித்து 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!