பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரே தேர்வு!!

வரும் மே மாதம் நடக்கும் பொறியியல் கல்லூரி தேர்வு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்தன. சமீப ஆண்டுகளாக புதிதாக ஏராளமான பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருவதால், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது என கூறி, கடந்த ஆட்சியில், சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால், ஒவ்வொரு அண்ணா தொழில் நுட்ப பல்கலையும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. தேர்வு முறைகளும் தனித்தனியாக இருந்தன.இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலையுடன் இணைக்கப்படும் என அறிவித்து அதற்கான சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.

இந்த இணைப்பு குறித்து அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: 
 
 அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளை, அண்ணா பல்கலையுடன் இணைக்கும் பணிகளை செய்ய, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பணிகளை அக்குழு தற்போது செய்து வருகிறது. பல்கலைகள் இணைக்கப்பட்டதால், வரும் மே மாதம் நடக்கும் பொறியியல் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். பாடத் திட்டங்களும் ஒரே மாதிரியானவை.

பல புதிய பொறியியல் கல்லூரிகளில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் தான் அங்கு பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. புதிய கல்லூரிக்கு அனுமதி வழங்கும் போது, அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!