ஐக்கிய அரபு அமீரக எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது....

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசியம் எடுத்தாக வேண்டும்.
இதில் சமீபத்தில் ஒரு குழப்பமான சூழல் துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் Free Zone கம்பெனிகளில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்பட்டது. அதாவது, அபுதாபி 31-மார்ச்-2012, துபாய் 31-மே-2012 என்று கடைசி தேதி இருக்கும் பட்சத்தில் 31-ஜனவரி-2012லிருந்து அபராதம் விதிக்க தொடங்கியிருந்தனர், இதில் சிலர் அதனைச் செலுத்தி புதுப்பிக்கவும், புதிதாக செய்தும் கொண்டனர்.
இப்படி இருக்க, நேற்று செவ்வாய் emirates id authority வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அபுதாபி மற்றும் துபாய் Free Zone கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது, அறிவிக்கப்பட்ட தேதிவரை எவ்வித அபராதங்கள் இல்லை, குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் புதிய ஐ.டி.கார்டினை முறையாக பெற்றே ஆக வேண்டும்.
மற்ற அமீரகங்களான, சார்ஜா, அஜ்மான், ராசல்கைமா, ஃபுஜைரா, உம்முல்குவய்ன் இங்கே வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ஏற்கனவே கெடு தேதி முடிந்து விட்டதால் அபராதம் தொடர்கிறது.

நன்றி : கல்ஃப் நியூஸ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!