அதிரை வலைப்பூங்கா - www.adirai.in தளத்தின் புதிய சேவை

அஸ்ஸலாமு அலைக்கும்.அதிரையின் முதல் இணையமான அதிராம்பட்டினம்.காம் அதிரைவாசிகளை இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அறிவீர்கள்.


இணைய பயனர்களின் வசதிக்காக அதிராம்பட்டினம்.காம் என்பதை அதிரை.காம் என்று சுருக்கியும், ஆங்கிலம் அறியாதவர்களும் சரளமாக இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருக்களால் வாசிக்கும் வகையில் இயங்கி வந்த அதிரை.காம் தற்கால தேவைகளைக் கருத்தில்கொண்டு புதிய வசதிகளுடன் அதிரை.இன் என்ற பெயரில் கடந்த ஒருவருடமாக முழுக்க முழுக்க வணிகநோக்கின்றி தன்னார்வலர்களால் இயக்கப்பட்டு வருகிறது.

எனினும், ப்ளாக்கர் எனப்படும் இலவச வலைப்பூக்களில் நமதூர்வாசிகள் தனித்தனியாக எழுதி வருவதால் சில நல்ல ஆக்கங்கள் பலரது கவனத்தில் வராமல் வாசிப்பின்றி வீணாகப் போகின்றன.

இத்தகைய குறைபாடுகளைக் களையும் வகையில் அதிரையின் அனைத்து வலைத்தளங்களையும் திரட்டி வலைப்பூங்கா பகுதியில் பட்டியலாக இடுவதன்மூலம் அனைத்து தனிநபர் வலைத்தளங்களையும் அவற்றின் புதிய ஆக்கங்களுக்கு ஏற்ப உடனடியாக ஓரிடத்திலிருந்தபடியே வாசிக்கும் வசதியை பிப்ரவரி 2, 2012 முதல் அதிரை.இன் அறிமுக செய்கிறது.

மேற்சொன்னபடி, பயனுள்ள ஆக்கங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதோடு, அவற்றைத் தேடுவதில் வாசகர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலுமே "வலைப்பூங்கா" பதிவுகளைத் திரட்டும். தற்போது பயனிலுள்ள அதிரை வலைத்தளங்களில் 28 தளங்களை அதிரை.இன் வலைபத்திரட்டி அதிவேகமாகத் தொகுத்து எந்தவித பாரபட்சமின்றி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயல்படும் என்பதை அதிரை வாசிகளுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பயனுள்ள, பலதரப்பட்ட பதிவுகளையும் பதிவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இப்பகுதியில் அவ்வப்போதைய தேவைகளுக்கேற்ப மேம்பட்ட வசதிகள் செய்யப்படும். வலைப்பூங்காவில் பட்டியலிடப்பட்டுள்ள ஆக்கங்களுக்கு அந்தந்த வலைப்பூ உரிமையாளர்களே பொறுப்பாவர் என்பதையும் வாசகர்கள் அறியவும்.

குறிப்பு: இங்கு பட்டியலிடப்படாத வலைத்தளங்களின் முகவரியை info@adirai.in முகவரிக்கு மடலிட்டால், அடுத்த பதிப்பிலோ அல்லது தேவையானபோது இணைத்துக்கொள்வோம். அதிரை வலைப்பூங்காவில் உங்கள் பதிவை இணைக்க கீழ்கண்ட நிரலை உங்கள் வலைப்பூ சாளாரத்தில் இணைத்துக் கொண்டால், அதிரை.இன் திரட்டியில் தானாகவே பட்டியலிடப்படும். பட்டியலிருந்து நீக்க விரும்புவர்களும் அவ்வாறே தனிமடலிட்டால் 24 மணிநேர இடைவெளிக்குள் நீக்கப்படும்.

நன்றி: அதிரை.இன்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!