பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை - டி.ஆர் பாலு கோரிக்கை


திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசியபோது தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தக் கோரும் கோரிக்கை மனுவை அளித்தார், அதில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குதல், புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

மனுவை பெற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்வதாக உறுதியளித்தார். அப்போது அமைச்சரிடம் டி.ஆர்.பாலு தமிழகத்திலுள்ள ரயில்வே திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் 900 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சென்னை ராயபுரத்தில் 4 ஆம் ரயில் முனையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வர இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வற்புறுத்தினார்.

மேலும்,சென்னை தாம்பரத்தில் ரயில்வே முனையம் அமைப்பது,சென்னையில் 2 ஆவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட 7 புதிய ரெயில் தடங்களை கொண்டு வருதல், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி,அரியலூர்-தஞ்சாவூர்-பட்டுக் கோட்டை, திண்டுக்கல்-கம்பம்-குமுளி-எரிமேலி ஆகிய புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.




1 comments:

அப்துல் ஜலீல்.M said...

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!

உலகில் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், ...பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

இது தவிர, சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி-பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.See More
.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!