கீழத்தெரு முஹல்லா : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் மற்றும் நிலம் ஒப்படைப்பு !


கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூர் கீழத்தெரு முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதியான புதுக்குடி நெசவுத்தெருவில் அமைந்துள்ள வீடுகளில் எற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது . வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கரையானது . வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும் விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அதிரை மற்றும் அமீரக கிளைகளின் அதன் நிர்வாகிகள் சார்பாக நிதி உதவி கோரி நமது சகோதர வலைதளங்களில் வேண்டுகோள் விடப்பட்டது.


இவ்வேண்டுகோளை ஏற்று இத்தீ விபத்தால் எற்பட்ட சேதத்திற்க்கு உதவும் வகையில் நமதூரைச் சேர்ந்த சமூதாய அமைப்புகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்வந்து உதவி செய்தனர்.  


அவ்வாறு திரட்டப்பட்ட நிதி உதவியால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் சகோதரர் புஹாரி மற்றும் சகோதரி முத்துநாச்சியா ஆகியோர்களுக்கு தலா ஒரு வீடு என இரண்டு வீடுகள், மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் கணவனை இழந்த சகோதரி. பலிலா அவர்களுக்கு நிலம் ஓன்று வாங்கிப் பத்திரப் பதிவு செய்யப்பட்டு நமதூர் பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லாம் அவர்கள் முன்னிலையில் பயனாளிகளிடம் நேற்று ( 15/03/2012  ) ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகள் மற்றும் 15 வது வார்டு உறுப்பினர் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.




நமதூரைச் சேர்ந்த சமூதாய அமைப்புகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முன்வந்து உதவி புரிந்தனர். இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயரைப் போக்கும் வகையில் அவர்களின் வாழ்வாதரத்தில் பங்குப்பெறும் விதமாக நிதி உதவிகள் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், இவ்வேண்டுகோளை அனைவருக்கும் கொண்டுச்சென்று உதவிகள் பல இலகுவாக வந்தடையச் செய்த அதிரைச் சகோதர வலைதளங்களுக்கும்,  சம்பளம் ஒரு பொருட்டல்ல என நிருபித்து அதன் பிரகாரம் தச்சுப் பணிகளை செய்து தந்த ஆசாரி மோகன் அவர்களுக்கும் எங்களின் முஹல்லா சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை அன்புடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாகிகள் - கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரகம்

குறிப்புகள் சில :
1.       கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகள் சார்பாக திரட்டப்பட்ட மொத்த தொகை ரூ 247,260/- இதில் இரண்டு வீடுகள் கட்டுவதற்கு செலவீடப்பட்ட தொகை ரூ 244,509/-, மீதி இருப்பு தொகையாக ரூ 2751/- உள்ளது.

2.       மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் ( TIYA ) மூலம் வழங்கப்பட்ட ரூ 50,000 /- , சகோ. உமர் ( சம்சுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களால் வெளிநாடுகள் வசூல் மூலம் பெறப்பட்ட ரூ 35,000 /- மேலும் சகோ. உமர் அவர்களால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட ரூ 5000 /- மற்றும் அதிரை மீன் மார்க்கெட் கீழத்தெரு சகோதரர்கள் மூலம் பெறப்பட்ட ரூ 45,000/- ஆகக்கூடுதல் ரூ 135,000/- மதிப்பீட்டில் மனைக்கட்டு நிலம் வாங்கிப் பத்திர பதிவு செய்யப்பட்டது.

3.       நேற்று நடந்த நிகழ்ச்சியில் சகோ. மான் A. நெய்னா முகமது ( AAMF ன் துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களால் பயனாளிகள் இருவருக்கு தலா ரூ 2000/- வீதம் மொத்தம் ரூ 4000/- வழங்கப்பட்டது.

4.       மேலும் தீ விபத்து - வரவு செலவு கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் கீழத்தெரு முஹல்லா – அதிரை மற்றும் அமீரக நிர்வாகிகளை தொடர்பு கொண்டுத் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம். 

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

2 comments:

அஸ்ரஃப் said...

"ஜஸாகல்லாஹு கைரா" இதற்காக உழைத்த அனைத்து நல்லுல்லங்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை தருவானாக ஆமீன்

habeb hb said...

HABEB HB;ASSALAMU ALAIKUM UTHAVEE SAYTHA ANAYVARUKUM ENNUDAYA NANTRI

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!