பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி தண்டவாளங்களை அகற்ற இடைக்காலத் தடை!


சென்னை-காரைக்குடி இடையே இருந்துவந்த குறுகிய ரயில்பாதை (மீட்டர் கேஜ்), சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழித்தடத்தில் அகல ரயில்பாதை அமைக்கப் போவதாகச் சொல்லி மயிலாடுதுறை - காரைக்குடி இடைப்பட்ட வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் ரயில்வே துறையும் தென்னக ரயில்வேயும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவதால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய ஊர்மக்களும் வர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு மத்திய அமைச்சர்கலையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பின்னரும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையின் சமீபத்தில் வெளியான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான பணிகளை முடுக்கிவிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணிகள் தொடங்கும் வரை, திருவாரூர்-பட்டுக்கோட்டை மீட்டர்கேஜ் பாதையை அகற்றுவதற்கு தற்போது சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தலைவர் செந்தில்நாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னிலையில் கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் ரூபர்ட், பர்ணபாஸ், ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, கடந்த 2007-2008 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை பணிகள் முடிந்தவுடன் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணிகள் தொடங்கப்படும் என, அறிவித்திருந்தது. தற்போது மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில் பாதை பணி முடியும் நிலையில், திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை தொடங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முதற்கட்டமாக திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை இடையே உள்ள 77 கி.மீ., தூரத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் உடனடியாக பட்டுக்கோட்டை வரை உள்ள மக்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கு ரயில் சேவையை பயன்படுத்த முடியும். ஆனால், இதற்கென பயன்படுத்த வேண்டிய நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர்-காரைக்குடி வரையுள்ள அகல ரயில்பாதை பணிகள் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே முதற்கட்டமாக துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே பணியை தொடங்குவதாக அறிவித்து விட்டு திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை இடையே உள்ள தண்டவாளங்களை அகற்றுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி டெண்டர் அறிவிப்பு தரப்பட்டுள்ளது.இதன்மூலம் ஏற்கனவே அறிவித்தபடி திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணிகள் உடனே தொடங்கப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.

எனவே, திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரயில்பாதை பணிகளை உடனே திருவாரூரில் இருந்து துவங்க வேண்டும். 2007-2008 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்த வழித்தடங்களுக்கு மாற்றக்கூடாது எனவும்,திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பணிகள் நிறைவு செய்யப்படாமல் மற்ற தண்டவாளங்களை பிரிப்பது மக்கள் நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி வெளியிடப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, ரயில்வே மேல்மட்ட அதிகாரிகள் இன்னும் நான்கு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், அதுவரை திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை இடையே உள்ள தண்டவாளங்களை அகற்றக்கூடாது என தடைவிதித்து, நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.


நன்றி: இந்நேரம்.காம்


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!