பட்ஜெட் அறிக்கை : உயரும் மற்றும் குறையும் வரிகள்


சென்னை: இன்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், சமையல் எண்ணெய், வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலை உள்ளிட்டவை உயருகின்றன. இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாவது:


மது விலை உயர்வு

சமையல் எண்ணெய் மீதான மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீத வரி அதிகரிக்கப்படும்.

விளக்குகள் மீது வரி குறைப்பு

கோதுமை மீது தற்போது விதிக்கப்படும் 2 சதவீதமாகவும், - ஒட்ஸ் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாகவும், மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளக்குகளுக்கு தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

இன்சுலின் வரி வாபஸ்

பெருகி வரும் சர்க்கரை நோயாளிகளை கருத்தில் கொண்டு, இன்சூலின் மருந்துகளின் விலையினை குறைக்கும் பொருட்டு, அதன் மீது தற்போது விதிக்கப்படும் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் தொடர்ச்சியாக சானிடரி நேப்கின்கள் மற்றும் டயாபர்கள் தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும். கையினால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். - பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் காம்புகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

குறைந்த விலையில் ஹெல்மட்

போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தலைக் கவசத்திற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

habeb hb said...

அருமையான செய்தி வெளிட்டதுக்கு ; நண்பர் அசீம் மிஹ நன்றி

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!