தமிழக மின்கட்டணம் உயர்வு அறிவிப்பு



தமிழக மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது

வரும் 1-ஆம் தேதி முதல் இந்த மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்கட்டண உயர்வு விவரம் :



வீடுகளுக்கு...........................

* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில்  200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75

தொழிற்சாலைகளுக்கு........

தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.

வர்த்தக நிறுவனங்களுக்கு.........

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்

* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50

குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு.......

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4

வழிபாட்டுத் தலங்களுக்கு...........

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5

விசைத்தறி கூடங்களுக்கு........

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4

கல்வி நிறுவனங்களுக்கு.........

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5

வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிகளவு கட்டணம் செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!