ரயில் கட்டண உயர்வு வாபஸ்


புதுதில்லி, மார்ச்.22: ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக புதிய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
முதல் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசியைத் தவிர்த்து சாதாரண வகுப்பு, ஸ்லீப்பர்  கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
 
கட்டண உயர்வு ஏழை, எளியவர்களை பாதிக்கும் என்பதால் அதைத் திரும்பப் பெறுகிறேன் என முகுல்ராய் கூறினார்.
 
முன்னதாக தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அவரது சார்ந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தினேஷ் திரிவேதியை நீக்கிவிட்டு முகுல்ராயை புதிய ரயில்வை அமைச்சராக்க மத்திய அரசை நிர்பந்தித்தது. அதன்படி புதிய அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்த நிலையில் திரிவேதி பதவி இழக்க காரணமான ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முகுல்ராய் அறிவித்துள்ளார்
 
 

1 comments:

அஸ்ரஃப் said...

இவை நடுத்தர மக்களுக்கு கிடைத்த சேமிப்பாகும்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!