துபாயில் நடந்த உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து.


இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து. ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌லைமையில் அமைதிப் பேர‌ணி ந‌டைபெற்ற‌து.

இந்த‌ பேர‌ணியையொட்டி பாராசூட் வீர‌ர்க‌ள், நூற்றுக்க‌ண‌க்கான‌ மோட்டார் பைக்குகள், உய‌ர்த‌ர‌ சொகுசு கார்க‌ள் உள்ளிட்ட‌வையும், ஆயிர‌க்க‌ண‌க்கான ம‌க்க‌ளும், ப‌ள்ளி மாண‌வ‌, மாண‌விய‌ரும் ஆர்வ‌முட‌ன் ப‌ங்கேற்று அமைதியை வ‌லியுறுத்தி கோஷ‌மிட்ட‌ன‌ர்.

உட‌ல் ஊன‌முற்றோரும் த‌ங்க‌ள‌து வீல் சேரில் ப‌ங்கேற்று அமைதி முழ‌க்க‌மிட்ட‌து அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌து. இப்பேரணியில் இன,மத, மொழி பேதமின்றி அனைத்து நாட்டு மக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.காவ‌ல்துறையின‌ர் பேர‌ணியில் ப‌ங்கேற்ற‌ ம‌க்க‌ளை பூச்செண்டு கொடுத்து வ‌ர‌வேற்ற‌ன‌ர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!