+2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் கடைசி வாரத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் சி.டி.க்கள் மூலம் பெறப்பட்டு, இப்போது தவறுகளை சரிசெய்யும் பணிகள் ஆன்-லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன. வரும் 30-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தொடர்பான விவரங்களைப் பள்ளிகளின் மூலம் ஆன்-லைன் வழியாக ஜனவரி 4-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்வெட்டு, கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்வது கடினம் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் கிராமப்புறங்களில் பகலில் பெரும்பாலான நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் இல்லை. எனவே, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ள தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. ஆன்-லைனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் இரண்டு திருத்தங்களுக்கு மேல் இதில் செய்யமுடியவில்லை. எனவே, சரியான விவரங்களை வழங்குவதில் பிரச்னை உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி, "ஆன்-லைன் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், அதில் விவரங்களை இந்த ஆண்டு பதிவு செய்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர்களும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியோ, இன்டர்நெட் வசதியோ கிடையாது. அப்படியே இருந்தாலும் மின்சாரம் கிடையாது.
பள்ளிகளில் இருந்து வழங்கும் விவரங்களை சி.டி.க்களில் பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாற்று ஏற்பாடாக, இந்த மையங்களில் ஆன்-லைன் வழியில் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் விவரங்களைப் பதிவு செய்ய இன்டர்நெட் மையங்கள் ரூ.10 வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது. சராசரியாக 50 முதல் 300 மாணவர்கள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே, இதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு, அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ஆன்-லைன் வழியே விவரங்களைப் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்யலாம்." என்று தெரிவித்தார்.

1 comments:
நியாமான கவலை
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!