மக்கா பெரிய மசூதியின் முன்னாள் இமாம் காலமானார்!

சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் முஸ்லிம்களின் புனித ஆலயம் உள்ளது. கஃபா என்று அழைக்கப்படும் அந்த ஆலயத்தின் முன்னாள் இமாம் நேற்று முன் தினம் காலமானார்.

அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல் எனும் பெயருடைய அவர் நேற்றுமுன்தினம் (17/12) மரணமடைந்தார்.அல் பகீர் என்னும் கிராமத்தில் 1923 ல் பிறந்த அன்னாருக்கு வயது 89.
அரபுலகில் இஸ்லாம் மதப் பிரச்சாரகராகத் திகழ்ந்த அவர் தம் தந்தை அப்துர்ரஹ்மான் அஸ்ஸபீலிடமே கல்வி பயின்று, 1945ல் அல்பகீரியா பிரைமரி ஸ்கூலில் ஆசிரியரானார். பின்னர் 1951ல் அல்புரைதா கலாசாலையில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், சவூதி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க தனது 40வது வயதில், 1963ல் மக்கா பெரிய மசூதியின் மத அறிஞராக (இமாம்) பொறுப்பேற்றார்.

1968 முதல் பெரிய மசூதியின் அனைத்து இஸ்லாம் மதக் காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியமிக்கப்பட்ட அவர், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 1971 முதல் மக்கா  மற்றும் மதீனா ஆகிய இரு பள்ளிவாசல்களின் நிர்வாகக் குழுவுக்கும்  தலைவராக நியமிக்கப்பட்டு, 29 ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டார்.

பின்னர் வயது காரணமாக, அவரது சுயவிருப்பத்தின் பேரில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்

8 comments:

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்

Adiraieast said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

M. அப்துர் ரஹ்மான் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....!!!
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!