கர்ப்ப காலத்தில் கவனம் தேவை பெண்களுக்கு...



பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். தனியாக இருக்கும் போது எந்த செயலையும் பயமின்றி செய்யலாம். ஆனால் கருவை சுமக்கும் போது ஒரு சில செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் பெண்கள், தைரியமாக எந்த ஒரு செயலையும் துணிந்து செய்கின்றனர்.
 
துணிச்சல் இருக்க வேண்டியது தான். ஆனால் அதே சமயம் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது எந்த நோய் எப்போது வரும் என்பது தெரியாது. நமது உடலை நாம் தான் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் நமது வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கர்ப்பமாக இருக்கும் போது,இது செய்ய வேண்டும் இது செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
 
இவை அனைத்தும் நமது நன்மைக்கே. ஆகவே அவ்வாறு சொல்லும் செயல்களில், கர்ப்பமாக இருக்கும் போது எவற்றில் கவனமாக இருக்க வேண்டும்   இன்று தைராய்டு பிரச்சனை அதிகமாக உள்ளது. அதில் ஹைப்போ மற்றும் ஹைப்பர் என்று இரண்டு வகைகள் உள்ளன. இதனை பரிசோதனை செய்வதன் மூலம் மட்டுமே தெரியும்.
 
ஆகவே இதனை சரியாக பரிசோதித்து, அதற்கான மருந்துகளை சாப்பிட்டு வர வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு அல்லது குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே கர்ப்பம் ஆவதற்கு முன்பே இதனை பரிசோதித்து, ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை மேற்கொண்டால், பிரசவம் நல்ல படியாக எந்த ஒரு பிரச்சனையுமின்றி நடைபெறும்.
 
கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அந்த அளவு கருச்சிதைவு தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!