இந்த நிலையில், பயணச்சீட்டு தாள் வீணாவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பயணச்சீட்டு விவரங்களை டிக்கெட் பரிசோதகரிடம் செல்போனில் காண்பித்தே பயணம் செய்யும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரெயில் பயணிகள் மத்தியில் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
செல்போனிலேயே டிக்கெட் விவரங்களை காண்பித்துவிடுவதால், டிக்கெட்டை எடுத்து வந்திருக்கிறோமா? மறந்துவிட்டோமா? என்ற சந்தேகமோ, பரபரப்போ ஏற்படாததால் ஆன்லைனில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் தற்போது இந்த வசதியைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமானது.
இந்த நிலையில், பயணச்சீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதி சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே துறையை போன்று பயணச்சீட்டை பயன்படுத்துவதால் பேப்பர் வீணாவதை தடுக்கவும், மின்சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இந்த புதிய முறையை கொண்டுவந்துள்ளது.
பயணச்சீட்டு விவரங்கள் கொண்ட தகவலை செல்போனில் காண்பித்தோ, டேப்லெட் அல்லது லேப்டாப்-ல் காட்டியோ பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றுவிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வழக்கமான முறையில், போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணம் செய்யலாம்.
கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இத்தகைய வசதி நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் முன்பதிவு பயணசீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதியை கொண்டுவரவேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!