செப்டம்பர் / அக்டோபர்-2012 எஸ்.எஸ்.எல்.சி. /ஓ.எஸ்.எல்.சி./ மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ-இந்தியன் தேர்வெழுதியோர் விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்த ஒரு கல்வி அலுவலகத்தையும் அணுக தேவையில்லை.
இதன்படி தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போர், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே ஜன.,7ம் தேதி மற்றும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம்: இருதாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305/-, ஒருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.205/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: விண்ணபிப்போர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விண்ணப்பத்தினை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும், விண்ணப்பத்தினை தேர்வர் சரியாக பூர்த்தி செய்த பின்னர், அதற்கான விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச்சீட்டு மற்றும் வங்கி செலுத்துச்சீட்டு (Bank Challan) ஆகியவற்றை பதிவிறக்கம் (Printout) எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பதிவிறக்கம் செய்த challan-ஐ கொண்டு அருகிலுள்ள 'கோர் பாங்கிங்' சேவையுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் Challan-ல் குறிப்பிட்டுள்ள தொகையினை 'அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6' என்ற பெயரில் செலுத்த வேண்டும் என்று தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!