தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், இடர்பாடு பங்கீட்டு முறையின்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய காவேரி நீரினை கர்நாடகம் திறந்து விட மறுத்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தாமதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பெருமக்களும் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் அரிசி பெறும் 1 கோடியே 84 இலட்சம் அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும், 40 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் இத்துடன் ரூபாய்.100/- ரொக்கத் தொகையும் சேர்த்து மொத்தம் 160 ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றினை அளித்து தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இந்த அரசாணையினைத் தொடர்ந்து 31.12.2012 தேதியில் புழக்கத்தில் உள்ள அனைத்து அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு உத்தரவினை உணவுப்பொருள் வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர்கள்/ மாநகர துணை ஆணையாளர் ஆகியோர் உபஒதுக்கீடு உத்தரவு பிறப்பித்து அதன்படி பொங்கல் தொகுப்பு தமிழ்நாட்டிலுள்ள 33,490 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும்பணி 8.1.2013 முதல் 17.1.2013 வரை ஒத்திவைக்கப்படுகிறது. இப்பணி 18.1.2013 முதல் மீண்டும் தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்படும். இதுவரை குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளாத அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் விடுதல் இன்றி வழங்கப்படும். இப்பணியை பொங்கல் பண்டிகைக்கு முன் முடிக்கும் பொருட்டு 13.1.2013 ஞாயிறு அனைத்து நியாயவிலை அங்காடிகளுக்கும் வேலை நாளாகவும் இதற்கு பதிலாக 16.1.2013 அன்று ஈடு செய்யும் விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்கள் நலன் கருதி முதல்வர் இச்சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளதால் உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தினை சிறப்பாக நிறைவேற்றிட தங்கள் ஒத்துழைப்பினை நல்கிடுமாறு உணவுத்துறை அமைச்சர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு விநியோகம் நடைபெறும் காலத்தில் வழக்கம் போல அனைத்து அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, பாமாயில் முதலியன தொய்வின்றி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு அரிசி, சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பிரச்சனைகள் உள்ள நியாயவிலைக் கடைகளை கண்டறிந்து அவைகளில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு தக்க பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டம், வட்டம், மண்டல அலுவலர்கள் காவல் துறை அலுவலர்களை அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு விநியோகம் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கூட்டத்தில் அரசு செயலாளர் நிர்மலா, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பஷீர் அஹமது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.சந்திரசேகரன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் கலையரசி, குடிமைபொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் கூடுதல் இயக்குனர் கே.இராதாகிருஷ்ணன், உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
6 comments:
தகவலை பகிர்தமைக்கு நன்றி
முக்கியமான தகவல் நன்றி தம்பி ஹபீப் !!!!!
முக்கியமான தகவல் நன்றி தம்பி ஹபீப் !!!!!
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் முக்கியமான தகவல் நன்றி
பயனுள்ள பதிவு.
பதிந்து அறியத்தந்த சகோதரர் ஹபீபுக்கு நன்றி.
முக்கியமான தகவல் நன்றி
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!