தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதைக்கு அனுமதி...

தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதை அமைக்கப்பட இருப்பதாக ரெயில்வே மந்திரி, மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கு, மத்திய ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது-
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில்பாதை அமைக்க கோரி தாங்கள் நேரிலும், கோரிக்கை மனு மூலமாகவும் பலமுறை தெரிவித்தீர்கள். அதன் பயனாக, தாங்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே 47.2 கி.மீ, தூரத்திற்கு ரூ.290.05 கோடியில் புதிய ரெயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி பாதையை அகல பாதையாக்கும் பணியையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால், மத்திய மந்திரி பழனி மாணிக்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கோடிக் கோடிப் பலகோடி
கூட்டை மாற்றிப் பறந்தோடும்!
ஆடிப் பாடிப் பகலிரவை
ஆளும் ஊழல் தொடா்கிறது!
நாடிச் செய்யும் திட்டமெலாம்
நாட்டைச் சுரண்டும் நரிச்செயலே!
வாடி வதங்கும் என்மக்கள்
வாழ்க்கை வாழ்தல் எக்காலம்!

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!