கள்ளச்சந்தை அதிகரிப்பு - புதிய கியாஸ் இணைப்பு தாமதம்!

 
 கள்ளச் சந்தை அதிகரித்துள்ளதால் புதிய கியாஸ் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகின்றது என்று வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புதிய கியாஸ் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் இண்டேன் சமையல் கியாஸ் நிறுவனத்தில் மட்டும் 30,100 பேரும், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 20,000 பேரும் காத்திருக்கிறார்கள் என்று கூறப் படுகிறது.

இந்த நிலையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சமையல் சிலிண்டர்களை விற்கும் நிலை அதிகரித்து வருதவால் புதிய இணைப்பு பெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எண்ணை நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் இடையே அடிக்கடி ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளும் புதிய இணைப்பு பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.  இதுதவிர எத்தனை நாட்களுக்குள் புதிய இணைப்பு கிடைக்கும் என்பது பற்றி வினியோகஸ்தர்கள் தெரிவிப்பது இல்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ள எண்ணை நிறுவன அதிகாரிகள், "புதிய இணைப்பு தாமதத்திற்கு காரணம், விண்ணப்பதாரர்கள் கொடுத்த தகவல்கள் சரியானதுதானா? ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு சிலிண்டர் இணைப்பு உள்ளது. ஒரே பெயரில் ஒரே முகவரியில் 2 இணைப்புகள், வெவ்வேறு பெயர்களில் ஒரே முகவரியில் உள்ள இணைப்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகுதான் புதிய இணைப்பு வழங்கப்படும்." என்று கூறுகின்றனர்.

எனினும் பல்வேறு ஆய்வுக்குப் பிறகு தற்போது புதிய கியாஸ் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2 comments:

சேக்கனா M. நிஜாம் said...

இதிலேயுமா !? டூபிளிகேட் !?

எதற்கும் எச்சரிக்கையாய் இருப்போம்

அதிரை.மெய்சா said...

எல்லாவற்றிலும் முறை கேடு நடக்கும் போது இந்த கியாசை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!