அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளி​ன் நன்றி அறிவிப்பு !!!


அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளி​ன் நன்றி அறிவிப்பு !!!

நன்றி
                   
உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள் மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. இதைக்கருத்தில் கொண்டு அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் மற்றும் அதன் நிர்வாகிகளின் சீரிய முயற்சியின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட நான்கு இடங்களில் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற முடிவையடுத்து, இதன் முதல் முயற்சியாக கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் வீட்டில் முதல் பயிற்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பம் செய்யப்பட்டது.
 
அதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சகோ. சுலைமான் [ கோக்கையா ] அவர்கள் இல்லத்திலும் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சி நடந்து வருகின்றது.

என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமதூரைச்சார்ந்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்க்க அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிதி உதவிசெய்த கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவருக்கும் கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளின் சார்பாக மீண்டும் நன்றிகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை கீழத்தெரு மஹல்லா - அமீரகம்
நன்றி .


4 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி அதிரை நியூஸ்...

ஹபீப் HB said...

இது போல் எல்லா தெருக்களிலும் தொடக்கட்டும்...இன்ஷா அல்லாஹு மார்க்கத்தை பரப்புவோம்...

அதிரை.மெய்சா said...

நமது தெருவுக்கு மட்டுமல்லாது நமது ஊருக்கே பெருமை சேர்க்கும் விசயத்தில் இதுவும் ஒன்று.

மார்க்க கல்வியை போதிக்க, ஆர்வம் காட்டி செயல் படுவர்களுக்கும், அதற்க்கு இடவசதி ஏற்படுத்திக்கொடுத்தவர்களும், நிதி உதவி செய்தவர்களுக்கும் மறுமையில் அல்லாஹ் விடத்தில் நற்க்கூலி கிட்டும்.

நாமும் துவா செய்வோமாக.

Unknown said...

இது போல் எல்லா தெருக்களிலும் தொடக்கட்டும்...இன்ஷா அல்லாஹு மார்க்கத்தை பரப்புவோம்...

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!