பாஸ்போர்ட் கட்டணம் இனி ஆன்லைனில் செலுத்தலாம்!

 
புதுடெல்லி: இனிவரும் காலங்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் கே.பர்தேஷி செய்தியாளர்களிடம் கூறும்போது இடைத் தரகர்களின் தலையீட்டை முற்றிலும் தடுக்க, பாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் புதிய முறை அடுத்த இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்-லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த புதிய முறை மூலம், கடன் அட்டை மற்றும் இணையதள வங்கிச் சேவைகள் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். தற்போது பாஸ்போர்ட் கட்டணத்தை அதன் அலுவலகங்களுக்கு சென்று செலுத்தும் நடைமுறை வழக்கத்தில் உள்ள நிலையில் இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்க கூடியதாகும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!