விடுபட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை: விண்ணப்ப எண் அளித்தால் மீண்டும் பரிசீலனை!

 
சென்னையில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பட்டியலில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 552 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 27,803 பேர் இளம் வாக்காளர்கள். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.

புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி சென்னையில் 901 வாக்குசாவடி மையங்களிலும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. அன்று ஒரு நாள் மட்டும் 6780 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அடையாள அட்டை பெறாதவர்களுக்கு வீடு வீடாக சென்று அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்து பெயர் இடம் பெறாதவர்களை பட்டியலில் சேர்க்க புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பெயர் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் அளித்த விண்ணப்பத்தின் எண்ணை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் அளித்தால் விண்ணப்பத்தின் மீது ஆய்வு செய்யப்படும்.

விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத பட்சத்தில் அத்தகைய ஆவணங்களை பெற்று கூடிய சீக்கிரம் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்கு வசதியாக விண்ணப்பங்கள் குறித்த அனைத்து தகவல்களும் ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கை இது வரையில் செயல்படுத்தப்படவில்லை. இதுவே முதல் முறையாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

அதிரை.மெய்சா said...

பயனுள்ள பதிவு பதிந்தமைக்கு நன்றி.

இந்த செய்தி படிப்பவர்கள் அறியாதவர்களுக்கு அறியப்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

Unknown said...

இந்த செய்தி படிப்பவர்கள் அறியாதவர்களுக்கு அறியப்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!