இந்தியாவில் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுக்கள் செலவழிப்பதும், அதன் பயன்பாடும் குறைந்து வருகிறதாம். அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் பற்றியும், இந்திய மக்களின் பணப்புழக்கம் பற்றியும், பணவீக்கம் பற்றியும் பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சுவாரஸ்ய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
1990 வரை 10 டூ 50...
1990ம் ஆண்டுகள் வரை 10, 20, 50 ரூபாய் தாள்கள் பயன்பாடு அதிகம் இருந்த நிலையில், 1998 முதல்100 ரூபாய் தாள்கள் முன்னிலை பெற்றன.
2004க்குப் பிறகு ரூ. 500...
2004க்குப் பிறகு ரூ. 500 2004ம் ஆண்டுக்குப் பிறகு, 500 ரூபாய் தாள்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
500 ரூபாயின் பங்கு 47%...
2010 -11ல் மொத்த பணப்புழக்கத்தில் 500 ரூபாயின் பங்களிப்பு 47 சதவீதமாக இருந்துள்ளது. மாறாக, 100 ரூபாயின் பங்களிப்பு 14.8 சதவீதமாக மட்டுமே இருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ரூபாய் நோட்டுக்களின் பங்களிப்பு வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கியத்துவத்தில் மாற்றம்...
அதிகரிக்கும் விலைவாசி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுவரும் மாற்றம், பணப்பரிமாற்றத்தில் வந்துள்ள புதிய முறைகள் என பலவும், ரூபாய் நோட்டுக்களின் முக்கியத்துவத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றத்துக்கு காரணம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புத்தம் புதிய 1000 ரூபாய்...
புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் 2000-வது ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், இப்போது 500 ரூபாய்க்கு அடுத்து, அதிக பங்களிப்பை தரும் கரன்சி தாளாக இது விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
1 comments:
ஆயிரம் ரூபாய்க்கு மணக்கட்டு வாங்கின காலம் போய் ஆயிரம் ரூபாய் கொடுத்து 2 கிலோ ஆட்டிறைச்சி தான் வாங்க முடியும் என்ற காலமாகி போய் விட்டது.
எது எப்புடியோ நடுத்தர வர்க்கத்தின் பாடு இனி திண்டாட்டம் தான்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!