ஆல்கஹால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை மருந்தாக உட்கொள்ளும் போது மட்டுமே தவிர, அதனை அளவுக்கு அதிகமாக பருகத் தொடங்கினால், பின் அதற்கு அடிமையாகும் நிலைமை தான் ஏற்படும். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இதுவும் பின் உயிரை பறித்துவிடும். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும், பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையையே சீரழித்துவிடும்.
புகைப்பிடித்தல்...
உலகிலேயே புகைப்பிடிப்பது தான் மிகவும் மோசமான பழக்கவழக்கம். இந்த பழக்கவழக்கமானது ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவித சந்தோஷத்திற்காக செய்ய ஆரம்பித்து தான் பழக்கமாகிவிடுகிறது. இந்த பழக்கம் மோசமான நிலையில் இருந்தால் தான், புற்றுநோய், இதய நோய் போன்றவை சிறுவயதிலேயே வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
கஞ்சா...
கஞ்சா மருத்துவத்தில் மிகவும் அரிதாக பயன்படும் ஒரு பொருள். ஆனால் சிலர் இதனை உபயோகித்து, அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த கஞ்சாவானது மனிதனை முற்றிலும் வெறிப்பிடித்தவன் போல் செய்துவிடும். எனவே இந்த பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
இண்டர்நெட்...
இன்றைய காலத்தில் மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவற்றை விட, இண்டர்நெட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தான் மிகவும் கொடியது. மேலும் தற்போது மேற்கொண்ட சர்வே ஒன்றில் கூட, மற்ற பழக்கவழக்கங்களை விட இண்டர்நெட்டிற்கு அடிமைப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் மிகவும் மோசமாகிவிடும். குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்துவோர், மாய உலகிலேயே எப்போதும் மிதப்பார்கள்.
காப்ஃபைன்...
காப்ஃபைன் என்றதும் பயப்பட வேண்டாம். காபி, டீ மற்றம் இதர காப்ஃபைன் உள்ள பானங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்படும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், அவ்வப்போது குடிப்பது நல்லது. இல்லையெனில் சிலசமயங்களில் அவற்றில் உள்ள காப்ஃபைன் பொருளானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
டிவி...
வீட்டிலேயே டிவி மிகவும் ஆபத்தான பொருள் என்று சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா? ஆம், உண்மையில் அந்த சிறிய டிவி பெட்டியானது ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மை உடையது. எப்படியெனில், அந்த டிவியை அதிகம் பார்த்தால், அதில் வரும் நிகழ்ச்சிகளால், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதால் உடல் எடை அதிகரிப்பது, கண்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும்.
ஜங்க் உணவுகள்...
தற்போதைய காலத்தில் எங்கேனும் வெளியே சென்றால், சாப்பிடுவது என்னவென்று பார்த்தால் அது பிட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளைத் தான். இத்தகைய ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். அதிலும் இதய நோய், உடல் பருமன் போன்றவையே. எனவே இத்தகைய பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
போதைப்பொருள்...
போதைப் பொருட்களில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, குற்றவியல் செயல்களை செய்யத் தூண்டும். சில சமயங்களில் அந்த பொருட்களை பயன்படுத்துவதால், உடனே மரணம் கூட நிகழலாம்.
தூக்க மாத்திரை...
சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய பழக்கத்தை ஒரு முறை கையாண்டால், பின் அவை இல்லாமல் தூக்கமே வராது. எனவே இவ்வாறு தூக்க மாத்திரையை பயன்படுத்துவதை விட, அதற்கு பதிலாக இயற்கை முறைகளான உடற்பயிற்சி, உணவுகள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாமே!
மொபைல்...
மொபைல் போன் இல்லாதவர்களை தற்போது பார்க்கவே முடியாது. அதிலும் அந்த மொபைல் போன்களை எங்கு சென்றாலும், எடுத்து செல்வர். சொல்லப்போனால் அத்தகைய மொபைலை தூங்கும் போது, குளிக்கும் போது, ஆர்வத்துடன் வேலை செய்யும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பர். சிறிது நேரம் அது இல்லாவிட்டாலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. பித்து பிடித்தது போல் இருப்பர். எனவே மொபைலை தொடர்பு கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்ந்து, செயல்படுவது நல்லது.
1 comments:
அருமையான நல்ல பதிவு
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!