வீதியில் சிகரெட் வீசினால் அபராதம்!

துபாய்:  வாகனத்திலிருந்து சிகரெட்களை வீதியில் வீசுபவர்களுக்கு ரூ 7500 அபராதம் விதிக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலமான துபாயின்,  போக்குவரத்துத்துறை இயக்குனர் முஹம்மத் ஸெய்ப் அல் ஷபீன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன்படி வாகனத்தில் செல்பவர்கள் சிகரெட்டினை வெளியில் எறிந்தால், 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2011 ஆம் ஆண்டு துபையில், சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக இருந்தது எனக் குறிப்பிட்ட ஸெய்ப், 2012ல் இந்த எண்ணிக்கை 123 ஆக குறைந்திருப்பதாக தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு, வாகனம் ஓட்டும் போது அலைபேசி உபயோகித்த 44,000 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களிடம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் உரையாடும் போது ஸெய்ப் இந்தத் தகவல்களை தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!