இணையத்தில் உங்கள் விவரங்கள் திருட்டுப்போவதை தடுப்பது எப்படி?

 
அண்மைக்காலங்களில் இணையதளங்கள் வழியாக நமது சுய விவரங்கள் திருடப்படுவதும், பின்னர் அதனால் பின்விளைவுகளை சந்திப்பதுமாக தினங்கள் நகர்கின்றன.
 
தெரியாத அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து 'சலுகை' எஸ்எம்எஸ்களை பெறுகிறீர்கள் அல்லவா? அதுகூட இப்படி நடத்தப்பட்ட ஒருவகையான திருட்டுதான்.

சிலநேரங்களில் உங்களுக்கு அலைபேசி செவையைத்தரும் நிறுவனங்கள் இந்தவேலையை செய்கின்றன. சில நேரங்களில் நாம் பெரிதும் நம்பிப் பயன்படுத்தும் பெரிய பெரிய நிறுவனங்களே நமது விவரங்களை மொத்தமாக விற்கின்றன என்பதெல்லாம் பரவலாக நடக்கின்ற வாதம்.
சரி! உங்கள் தொடர்பான விவரங்கள் இணையம் வாயிலாக எப்படி திருடப்படுகின்றன...அதை எப்படி தடுக்கலாம் என்பதை இங்கே விவரித்துள்ளோம்.
 
நண்பனை நம்பலாமா...
 
 
சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள். அதை உங்களுடன் இருப்பவர்களிலேயே யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டால்?! அதோகதிதான். முடக்குவது அவ்வளவு சுலபமில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே பாதுகாப்பு அவசியம் நண்பரே!
 
ஐடி கார்டு கூட ஆபத்தாம்...
 
 
ஆம்! இம்மாதிரி தகவல்களை திருடுவதை RFID தெப்ட் என்கிறார்கள் வல்லுனர்கள். அதாவது, உங்கள் ஐடி கார்டு மூலமாகவே உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடியுமாம். எனவே ஜாக்கிரதை!
 
தளங்களிலிருந்து திருடுவது...
 
 
உதாரணத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு, ட்விட்டர், மற்றும் ஃபேஸ்புக் போன்ற 50க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்கள் தாக்கப்பட்டு தகவல்கள் திருடப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஒப்புக்கொண்டுள்ளன. எனவே சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான சுய விவரங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை சேமிக்காதீர்கள்!
 
வைரஸ்...
 
 
மால்வேர் என்பதுபோன்ற சிலவகையான வைரஸ்கள் நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்துகையில் உங்கள் கணினியில் நிறுவப்படலாம். அவ்வாறு செய்தால் ஒவ்வொருமுறை நீங்கள் இன்டர்நெட் இணைக்கையில் உங்கள் மேலான தகவல்கள் மற்றும் கடவுச்சொற்கள் களவுபோகக்கூடும். எனவே நல்ல வைரஸ் தடுப்பான் பயன்படுத்துங்கள்.
 
ஈமெயில் திருட்டு...
 

ஈமெயில் வாயிலாக பல்வேறு விளம்பரங்களை அனுப்பியோ அல்லது வேறுமாதிரியான படங்களை அனுப்பியோ உங்கள் முக்கியமான தகவல்கள் திருடப்படலாம்.
 

4 comments:

அதிரை.மெய்சா said...

பயனுள்ள விழிப்புணர்வு தகவல்.

பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

அப்துல் ஜலீல்.M said...

Good news

shafeeq said...

its very important thing will update in our web and much useful as well we have to share this with our all friends for advance security

theeadirainews said...

நல்ல தகவல் பாஸு எந்த சைட் லேன்ந்து யடுதிங்க பாஸு அத போடுங்க பாஸு நாங்களும் போய் யடுபூம்ல நீங்க மட்டும் எடுத்த போதுமா

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!