விஸ்வரூபம் :நீக்கிய அந்த ஏழு காட்சிகள் மட்டும்!


விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கைக்கிணங்க ஏழு காட்சிகள் நீக்கப்படும் என்றும் சில இடங்களில் ஒலிநீக்கம் செய்யப்படும் என்றும் கமல் ஹாசன் அறிவித்திருந்தார் அல்லவா? அவை பற்றிய விவரம் வருமாறு:

'இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு' என்று பெயர்ப்பட்டியலுடன் போடப்படும் அறிவிப்பு அட்டை மாற்றப்பட்டு 'இது ஒரு புனைவே' என்று காட்டப்படுமாம். சரியாகச் சொன்னால், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை, என்று படத்தின் தொடக்கத்தில் எழுத்துவடிவில் காண்பிக்கப்படுமாம்

மேலும் நீக்கப்படும் காட்சிகள் :

1.திருக்குர்ஆன் வசனப் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்

2.முல்லா உமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்திரிக்கும் காட்சிகள் இனி இருக்காது

3.குண்டு வெடிப்பைத் தடுப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்காவில் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில்  தொழுகைக் காட்சிகளும் நீக்கப்படுமாம்.

4.ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ஆன் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் காண்பிக்கப்படும்.

5.முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை'' என்று நாசர் பேசும் வசனம் நீக்கப்படும்

6.ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும் காட்சிகளில் உள்ளதாம்

7. ஆப்கன் முல்லா உமரின் சிறுவயது மகன் கண்களைக் கட்டிக்கொண்ட நிலையில் துப்பாக்கிகளை இனங்காணும் காட்சி

இவையே உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!