தமிழகத்துக்கு ஹஜ் விசா எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிக்கை!

 ஹஜ் பயணங்களுக்கான விசா எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.



இதுகுறித்து இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மத்திய அரசு தமிழகத்துக்கு ஆண்டுக்கு 3,300 ஹஜ் விசாக்களை மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. தமிழக முதல்வர் இகு குறித்து மத்திய அரசை வலியுறுத்தி குறைந்த பட்சம்  7 ஆயிரம் விசாக்களையாவது பெற்றுத் தரவேண்டும்.

மேலும், ஹஜ் விண்ணப்பப் படிவங்களுக்கு  கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் விண்ணப்பித்த அனைவருக்கும் பயணத்துக்கான விசா கிடைப்பதில்லை. எனவே ஹஜ் பயண விண்ணப்பப் படிவங்களை இலவசமாக வழங்க வேண்டும்.
பெரும்பாலும் வயதானவர்களிடம் பிறப்பு மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் இருப்பதில்லை. எனவே முதியவர்களுக்கு சர்வதேச பாஸ்போர்ட் எடுக்கு சான்றிதழ் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!