UAE: மருத்துவ துறையில் பணியாற்ற விரும்புவர்களுக்கு!
அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள், பார்மசிஸ்ட், நர...்ஸ் மற்றும் டெக்னிசியன்கள் இன்னும் இந்த துறையை சார்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவ துறையினால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்ற பின்பு தான் அமீரகத்தில் உள்ள ஏதேனும் தனியார் மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆனால்
தற்போது மருத்துவ துறையை சார்ந்தவர்கள் குறிப்பாக சொந்த நாட்டில் (OUT SIDE THE UAE) வசிப்பவர்கள் அமீரகத்தில் நடக்கும் தேர்வுகளை ஆன் லைன் வழியாக எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்பு இது போன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அமீரகத்தில் தங்கியிருந்த நேரடியாக அங்குள்ள மருத்துவ தேர்வகத்தில் விண்ணப்பித்து தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளவேண்டும், மேலும் இதில் வெற்றி பெறாதவர்கள் அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து பின்பு தான் மீண்டும் தேர்வு எழுத முடியம். இதனால் அமிரகத்திர்க்கு சுற்றுலா(VIST VISA) விசாவில் வந்து கலந்து கொள்ளவேண்டிய நிலையும், மேலும் இதில் ஒரு முறை தோல்வியுற்றால் மீண்டும் கலந்து கொள்வது என்பது சிரம்மான நிலையாக இருந்தது.
தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு விண்ணப்பதாரர்கள் தாங்கள் இருக்கும் நாட்டில் இருந்தவாறு தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, வாரம் ஒருமுறை ஒரு தேர்வு என்ற அடிப்பாடையில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் இந்த தேர்வுக்கான பாஸ்போர்ட் நகல், போட்டோ மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் விண்ணப்ப கட்டணம் ஆகியவை ஆன் லைன் வழியாக தங்களுடைய சொந்த நாட்டில் இருந்தவாறு பூர்த்தி செய்து அனுப்பலாம், விண்ணப்ப கட்டணம் மின்னணு கார்ட்(E-Dirham card ) வழியாக ஆன்லைனில் செலுத்தலாம், இத்தகைய E-Dirham Cardகள் அமீரகத்தால் அங்கீகரிக்கபட்ட வங்கிகளில் அதாவது நிதி மற்றும் உள்த்துறை(MINISTRY OF FINANCE OR MINISTRY OF INTERIOR) அல்லது அபுதாபி வணிக வங்கி மற்றும் துபாய் வர்த்தக வங்கி(Abu Dhabi Commercial Bank and Commercial Bank of Dubai) ஆகியவற்றில் நேரடியாக அல்லது ஆன் லைன் மூலமாக பெற்று கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை இணைய தளம் வழியாகவும் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய நடைமுறைகள் மூலமாக ஏற்கனவே அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று பணியாற்ற கூடிய வெளிநாட்டவர்கள் அல்லது அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று தற்போது அமீரகத்தை விட்டுவெளியே(OUT SIDE THE UAE) இருப்பவர்களும் தங்களுடைய சான்றிதழ் மறுமதிப்பீடு(upgrade Qualification and Experience) ஆகியவற்றையும் செய்து கொள்ள முடியும்.
இத்தகைய நடைமுறைகள் தற்போது அமீரக மருத்துவ துறையால் ஏற்படுத்தபட்டுள்ளதால் பண செலவு மற்றும் நேர விரையம் தவிர்க்கபடுகிறது மேலும் தேர்வுக்காக விசாவில்(VISIT OR EMPLOYMENT VISA) வரவேண்டிய நிலையும் தவிர்க்கலாம் எனவே இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.
கீழே கொடுத்துள்ள இணைய தளம் மூலம் கூடுதல் தகவல்களை பெற்று கொள்ளாம்.
http://www.moh.gov.ae/en/
தகவல்: கல்ப் நியூஸ்
3 comments:
இத்தகைய நடைமுறைகள் தற்போது அமீரக மருத்துவ துறையால் ஏற்படுத்தபட்டுள்ளதால் பண செலவு மற்றும் நேர விரையம் தவிர்க்கபடுகிறது மேலும் தேர்வுக்காக விசாவில்(VISIT OR EMPLOYMENT VISA) வரவேண்டிய நிலையும் தவிர்க்கலாம் எனவே இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.
தகவலுக்கு நன்றி மருத்துவர்கள் பயன்படுதிக்கொள்ளவும்.
தகவலுக்கு நன்றி மருத்துவர்கள் பயன்படுதிக்கொள்ளவும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!