மல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது கூரக்கத்தாளை !


மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் கூரக்கத்தாளை எனும் அதிசய மீன்கள் சிக்கியது. மொத்தம் 202 மீன்கள் சிக்கி இருந்தது.
ஒரு மீன் 20 முதல் 30 கிலோ வரை எடைகொண்டதாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இவ்வகை மீன்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ.60 லட்சத் திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகம்மது யூசுப் கூறுகையில்,
'இவ்வகை மீன்களில் உள்ள நெட்டி  என்ற உறுப்பு மருத்துவ குணம் உடையது. இவ்வகை மீன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறைமுகத்தில் 7 சிக்கியது. தற்போது 202 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை உள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக வியாபாரிகள் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்' என்றார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய கூரக்கத்தாளை மீன்களை ரூ.60 லட்சத்துக்கு வாங்கிய வியாபாரிகள் அதை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.


நன்றி : செல்வகுமார்

ரிப்போர்ட்டர் - தினகரன்

thanks to adirai news

1 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி அப்போ மீன் சிக்கியவர்க்கு லாட்டரில் பணம் விழுந்த மாதிரி அவர் இப்போ லச்சாதிபதி என்று சொல்லுக்க.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!