அஸ்ஸலாமு அலைக்கும்
என் பிறந்த நாளான இன்று (18/07/2013) (அகவை 57-ல் அடிஎடுத்து வைக்கும் நாளில்.
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக!
இற்றைப் பொழுதில் இன்பம் பொங்கிடும் ஓர் இனிய செய்தி:
“கவித்தீபம்” என்னும் பட்டத்தை எனக்கு, இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டம் அனுப்பி உள்ளனர்; அதன் நகல் இணைப்பில் காண்க.
என்றும் சிகரத்தை நோக்கி
குன்றாத உங்களின் ஆசிகளைத் தேக்கி..
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir. blogspot.com (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844/ 055 7956007
11 comments:
வாழ்த்துக்கள்!!!!!
ஜஸாக்கல்லாஹ் கைரன்.
தமியேனுக்கு இப்பட்டமும் மதிப்பும் சர்வதேச அளவில் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றதென்றால், அதில் இவ்வலைத்தள நிர்வாகியான உங்கட்கு இப்பாராட்டுகளைச் சமர்ப்பிக்கின்றேன்!
பட்டங்களை அடியேன் தேடி அலைவதில்லை
பட்டங்கள்/ அங்கீகாரங்கள் என்னும் அந்தஸ்தில் தரப்படும் ஓர் அரிய சான்றிதழ் என்பதாலும், அதனை மனமுவந்து அளிப்பவர்களின் மனம் நோகாமல் ஏற்பதென்பதை மட்டும் உளத்தூய்மையான நோக்கத்துடன் செயல்பட்டு, இச்சான்றிதழை ஈண்டு பதிய அனுமதிதேன். மேலும், சர்வதேச அளவில் நமதூர் கவிஞர்களும் அடியேனின் வழியில் அங்கீகாரம் பெற வைக்கும் ஓர் “ஊக்கம்” மட்டும் தான் இதன் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால், எண்ணோட்டமும், கண்ணோட்டமும் தவறாகிப் புரிதலில் குறைபாடுடையோர் எவரேனும் தவறான செய்திகளைப் பரப்பி விட வேண்டாம் எனபதற்காகவே இம்முன்னோட்ட தன்னிலை விளக்கமாகும்.
நோன்பின் களைப்பை மறந்து, எங்களின் கலைப்படைப்பை எப்படியும் காலஅட்டவணைக்குள்/குறிப்பிட்ட திகதிக்குள் பதிவுக்குள் கொணரும் உங்களின் ஊக்கம் தான் எங்களின் ஆக்கத்தின் ஆணிவேராகும்!
உங்களின் உளம்கனிந்த வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் உளம்நிறைவான் நன்றிகள்.
என்றும் உங்களின் ஆசிகளைத் தேக்கி,,,,
குன்றாப் புகழென்னும் சிகரத்தே நோக்கி,,
என் அன்பு காக்கா வாழ்த்துக்கள்!!!!!
நன்றி!! வாழ்த்துக்கள்!!!!!
உளம்கனிந்த வாழ்த்துக்களும் + பாராட்டுகளும்.
உளம்கனிந்த வாழ்த்துக்களும் + பாராட்டுகளும்.
உளம்கனிந்த வாழ்த்துக்களும் + பாராட்டுகளும்
இலக்கியத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மற்றவர்களுக்கு சளைத்ததல்ல என்பதற்கு இத்தகைய அங்கீகாரங்கள் சான்று பகர்கின்றன.
இதை இதைத் தான் என் நோக்கமாக உளத்தூய்மையுடன் செய்தும், மண்ணின் மற்ற கவிஞர்களும் முன்வந்து பேறு பெற வேண்டும் என்பதே என் பேரவா!
தமியேன் இணைந்துள்ள “சந்த வசந்தம்” என்னும் இணைய தள யாப்பிலக்கணக் குழுமத்தில் இதுகாறும் முஸ்லிம் கவிஞர் என்று சொல்லும் அளவுக்கு என் இனிய நண்பரும் என்னை மக்காவில் சந்தித்தவருமான கவிஞர் இப்னு ஹம்தூன் (ரியாத்) அவர்கள் மட்டுமே இருந்தார்கள்; இறையருளால் அடியேன் அடியெடுத்து வைத்தேன்; இப்பொழுது இப்பட்டயத்தை வழங்கி என்னை கவுரவப்படுத்தியுள்ள என் மரியாதைக்குரிய சகோதரி (இலங்கை)ஹிதாயாறிஸ்வி அவர்களையும் அழைத்துச் சேர்த்துள்ளேன்; இன்னும் முஸ்லிம் கவிஞர்களில் குறிப்பாக யாப்பின் வழிநின்று மரபுப்பாக்கள் மட்டும் வனையும் பலர் என்னிடம் அத்தளத்தில் இணைய காத்துள்ளன்ர் என் வழிகாட்டுதலின்படி. இப்படியாக, ஊடகம் என்னும் மாபெரும் ஈர்ப்புச் சக்தியுள்ள இணையத்தில் நம்மவரின் பங்களிப்பு அவசியம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
இங்குப் பின்னூட்டங்களில் வாழ்த்தளித்த உங்களனைவருக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.
இன்ஷா அல்லாஹ் இன்னும் பற்பல காத்திருக்கின்றன; அதனால் அதிரையின் பெயர் மின்னும் அகிலமெலாம் என்பதை அறிவிக்கிறேன், அபுல்கலாம்!
சாதனைகட்கானத் தேர்வில் தமியேனின் பங்களிப்புகளும் அதன் முடிவுகளும் என்னவென்பதை இப்பொழுது அறிவித்தால் அஃது என் “தற்பெருமை” என்ற கூக்குரல் வந்து விழும்; ஆனால் சாதனையின் பத்திரம் கிட்டியபின்னர் சொன்னால் அதிரையின் புகழ் எழும்! காத்திருங்கள்;, துஆ செய்து அன்பால்ம்பூத்திருங்கள்!
assalamu alaikum!
Congratulations!!!
assalamu alaikum!
Congratulations!!!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!