அபுதாபி இஃப்தார் நிகழ்வில் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை!


அபுதாபி இஃப்தார் நிகழ்வில் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை!


 
ai7
அபுதாபி ஜூலை 26-
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்பட்டு வரும் அய்மான் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது.
அய்மான் மக்கள் மன்றம்,பத்ர் நினைவு தினம்,மற்றும் இஃப்தார் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் அபுதாபி செட்டிநாடு உணவாக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார்.
திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் முன்னிலை வகித்தார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்று பேசினார்.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த திருமலர் மீரான் சிறப்பு கவிதை வாசித்தார்.
புனித மிக்க ரமலான் மாதத்தில் நிகழ்ந்த பத்ர் போரின் நிகழ்வுகளையும்,அதன் மூலம் பெற வேண்டிய படிப்பினைகள் குறித்தும் அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹாபிள் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி விரிவான உரை நிகழ்த்தினார்.
ai91
மக்கள் மன்றம்
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை “ஒன்றுபடுங்கள் நன்று பெறுங்கள்” என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
எதிர்வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சமுதாய அமைப்பினர் ஒரே த்தொகுதியில் போட்டியிடும் சூழலை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
துவக்கமாக திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் கீழக்கரை சைய்யது ஜாஃபர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் சமுதாயம் அய்மான் கல்லூரிக்கு நல்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கவிதை வாசித்ததை தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் சார்பில் பிரதிநிதிகள் தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மண்டலச் செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான்
எஸ்.டி.பி.ஐ.சார்பில் அபுதாபி செயலாளர் உடன்குடி முஹைதீன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அமீரக காயிதேமில்லத் பேரவையின் துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வாழ்த்துரை வழங்கினார்.
ai5
நிர்வாகிகள் பதவியேற்பு
அய்மான் சங்கத்தின் துணைத் தலைவராக திருவாடுதுறை எ.அன்சாரி பாஷா அவர்களும், அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளராக காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி அவர்களும் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர்,அமீரக காயிதேமில்லத் பேரவை மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் கலீல்
மற்றும் அதிரை காதற் மொகிதீன்
துபாய் காயிதே மில்லத் பேரவை சார்பாக முதுவை ஹிதாயத்
மற்றும் காயல்பட்டினம்,அதிராம்பட்டினம்,கீழக்கரை, லால்பேட்டை,நாகூர்,உள்ளிட்ட ஊர் ஜமாஅத்
நிர்வாகிகள் பெரியபட்டினம் பைத்துல் மால் தலைவர் ஜஹாங்கீர்,சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அய்மான் சங்கம் மற்றும் கல்லூரியின் பிரமுகர்கள்,பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகளான லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,களமருதூர் ஷர்புத்தீன்,ஏர்வாடி அப்துல் சத்தார்
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ai3
அய்மான் சங்க பொருளாளர் கீழை ஹெச்.எம்.எம்.ஜமாலுத்தீன் நன்றி கூற மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
 
தகவல் :அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,      

அதிராம்பட்டினம் ( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com

1 comments:

KALAM SHAICK ABDUL KADER said...

சென்னை: தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு அசைவுமே லோக்சபா தேர்தலை நோக்கி என்பதை நோக்கியதாகவே இருந்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் இஃப்தார் விருந்து ரத்தும் திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மோடிக்கு எதிராக கையெழுத்திட்டால் நடவடிக்கை என்ற அறிவிப்பும் கூட லோக்சபா தேர்தலை மையமாக வைத்துதானா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது. கடந்த 15 ஆண்டுகாலமாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் இஸ்லாமிய தலைவர்களுடன் இணைந்து கொள்வார் ஜெயலலிதா. கடந்த காலங்களில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது இஸ்லாமிய தலைவர்கள் அதிருப்தியில் இருந்த போது இஃப்தார் விருந்தை ஜெயலலிதா நடத்தவில்லை. தற்போது கொடநாட்டில் இருக்கும் ஜெயலலிதா, உதகையிலேயே இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ பெருமாள் மறைந்ததைத் தொடர்ந்து இஃப்தார் விருந்து ரத்து செய்யப்படுகிறது என்று ஜெயலலிதா அறிவித்தார். அமைச்சராக இருந்த மரியம்பிச்சை இறந்த போது சட்டசபை கூட்டத் தொடரை தொடர்ந்தும் நடத்திய தமிழக முதல்வர் இஃப்தார் விருந்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ.வின் மறைவை முன்னிட்டு ரத்து செய்ததாக கூறுவது ஏற்புடையது அல்ல என்கின்றனர் இஸ்லாமிய தலைவர்கள் ... அப்புறம் என்ன காரணம் இருக்க முடியும்? பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவமானது எதிர்பாராத நிகழ்வுகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வைத்துவிட்டது. தமிழகத்தில் இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரசாரத்தை முன்னெடுக்க வைத்தது. பாரதிய ஜனதாவின் நட்பு கட்சியாக செயல்படுகிற அதிமுகவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். லோக்சபா தேர்தலில் பாஜக சார்பு அணியாக அறியப்பட்டு வரும் அதிமுகவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்க வேறு வழி என்ன? இந்து இயக்க தலைவர்கள் துயரமான சூழலில் இருக்கும் நிலையில் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் விருந்து கொண்டாடுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள்தானே? இதுவும் நல்லதுதான் என நினைத்து இஃப்தார் விருந்தை ரத்து செய்து சற்றே விலகிப் போன பாஜக உறவை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.. சரி திமுக தலைவர் கருணாநிதி திடீரென மோடி விவகாரத்தில் அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன? வி.பி.சிங் ஆட்சி காலத்திலேயே பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சியில் பங்கேற்றதுதான் திமுக. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவலாம்.. பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகிய நிலையில் திமுக தலைமை அப்படி ஒன்றும் பாஜகவை பகிரங்கமாக எதிர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையே மோடி விவகார அறிக்கை சொல்லி நிற்கிறது. லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாரதிய ஜனதா கூடுதல் இடங்களைப் பெற்றுவிட்டால் அந்த அணிக்கு தாவ ஒரு ஜன்னல் தேவை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் திமுக தலைமை இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆக தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுமே அணி சேர்க்கைக்கான ஒத்திகையை ஒவ்வொரு அரசியல் பிரச்சனைகளிலும் தொடர்ந்தும் நடத்தி வருகின்றன என்பதே நிதர்சனம்!

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-admk-dmk-try-to-join-bjp-alliance-179877.html

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!