சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.



சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில்,அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

 
இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது.இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழுமையாக முடிந்த நிலையில்,புதிய பன்னாட்டு முனையத்தில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.காலையில்,சிங்கப்பூரில் இருந்து
வந்த பயணிகளின் பயன்பாட்டுக்கு விமான நிலையம் திறந்து விடப்பட்டது.


அவர்களில் பெரும்பாலானோர் இது நம்ம சென்னை விமான நிலையம்தானா என அதிசயிக்கும் அளவுக்கு மாறிப் போயிருந்தது பன்னாட்டு முனைமம்.சர்வதேச அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் இந்தப் புதிய முனையம் உள்ளதாக பலரும் பாராட்டினர். குறிப்பாக குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் விரைவாக முடிந்தது.


 பாராட்டும்படி இருந்தது என்றனர்.விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையம்!

தகவல் : அதிரை ஈஸ்ட்  "ஜியாவுதீன் "

3 comments:

Unknown said...

மகிழ்வான செய்தி பதிவுக்கு நன்றி

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அழகாக படம் எடுத்து இருக்கிறார். சிறப்பான பதிவு.

Anonymous said...

மகிழ்வான செய்தி பதிவுக்கு நன்றி

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!