சென்னை - தஞ்சைக்கு 1–ந்தேதி முதல் புதிய விரைவு ரெயில் பழனிமாணிக்கம் எம்.பி. தகவல்


சென்னையில் இருந்து தஞ்சைக்கு வருகிற 1–ந் தேதி முதல் புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.


புதிய விரைவு ரெயில்

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்தது. அதற்கு ஏற்ப சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் 16177 என்ற எண்ணுடைய மலைக்கோட்டை விரைவு ரெயிலில் தற்போது 30–ந் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்றும், கும்பகோணத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் 16178 என்ற எண்ணுடைய மலைக்கோட்டை விரைவு ரெயிலில் 31–ந் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதனால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என்று அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வருகிற 1–ந் தேதி முதல் தஞ்சையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தஞ்சைக்கும் புதிய ரெயில் இயக்கப்படும் எனறு ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

பிரகதீஸ்வரர் எக்ஸ்பிரஸ்?

இதுகுறித்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:–

தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் என்பது தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், தேவையுமாகும். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.25 மணிக்கு தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதற்கான தொடக்க விழா மிக எளிமையாக தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.


அதே நாளில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு இரவு 11.30 மணிக்கு புதிய விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த புதிய ரெயிலுக்கு பிரகதீஸ்வரர் விரைவு ரெயில் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு பொருத்தமான பெயரை புதிய ரெயிலுக்கு சூட்டுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதுவரை தஞ்சை–சென்னை விரைவு ரெயில் என்றே அழைக்கப்படும்

முன்னதாக புறப்பட நடவடிக்கை

தஞ்சையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சென்றடையும். சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 10.30 மணி முதல் 11 மணிக்குள் புறப்பட வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இரட்டை ரெயில்பாதை பணி முடிந்தவுடன் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி : தினத் தந்தி

2 comments:

Adirai. B. Shajahan said...

பதிவுக்கு நன்றி

Unknown said...

பதிவுக்கு நன்றி

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!