இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்வதாகும். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனித பயணம் ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து செல்கிறார்கள்.
தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மெக்காவிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு 3729 பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து வெளி விவகாரங்களையும் தமிழக ஹஜ் கமிட்டி செய்து முடித்தது.
ஹஜ் பயணத்தின் முதல் குழு இன்று காலை 9மணிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 275 பயணிகள் இடம் பெற்றனர். இன்று இரவு 245 பயணிகள் புறப்பட்டு செல்கிறார்கள் புனித பயணம் மேற்கொண்டவர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், ஹஜ் கமிட்டி தலைவர் முகம்மது ஜான் பிற்பட்டோர் நலத்துறை செயலாளர் அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!