அதிரையர்கள் பண்டிகை காலங்களில் சுற்றுலா
செல்லும் பகுதியாக இருந்து வரும் லகூன் தீவு தற்போது உலகம் அறியும் வகையில்
சுற்றுலா தளமாக மாற இருக்கிறது.அதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம்
ரூபாய் நிதி ஒதுக்கீட்டை தமிழக முதலவர் அவர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்
ஆணை பிறபித்தார்.முத்துபேட்டை பகுதியில் இருக்கும் இந்த தீவு மாங்குரோவ்
சதுப்புநிலக்காடாக இருந்து வருகிறது. இதன் அளவு 11,885 ஹெக்டேர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது.குளிர்காலங்களில் வெளிநாட்டு பறவைகளான கிரே
பெலிக்கன் பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளம்மிங்கோ (பூநாரை), டார்டர்
(பாம்புத் தாரா), பிண்டெயில் டக் (ஊசி வால் வாத்து), பெயின்டட் ஸ்டாக்
(செங்கால் நாரை) ஆகியவைகள் மற்றும் குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய
பாலூட்டி பறவைகளும் வாழ்கின்றன. மேலும் காவேரி ஆற்றின் கிளை நதிகளான
நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு,
மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!