பள்ளி வளாகத்துக்குள் செல்போனில் பேச தடை ! ஆசிரியர், மாணவர்களுக்கு உத்தரவு !

மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வர தடை விதித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் செல்போன் எடுத்து செல்வது, பள்ளியில் செல்போனில் பேசுவது கூடாது. அதேபோல ஆசிரியர்களும் செல்போனில் பேசக்கூடாது என்று கடந்த 2008, 2009ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தரவை கொண்டு வந்தது. ஆனால், அந்த உத்தரவை பள்ளிகளில் யாரும் பின்பற்றுவது இல்லை. ஆசிரியர்களே பள்ளி வளாகத்தினுள் செல்போனில் பேசுகின்றனர்.

பள்ளி வளாகத்துக்குள் செல்போன் பயன்படுத்துவது குறித்து பல புகார்கள் வந்ததன் பேரில் தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனர் மீண்டும் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோ நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களின் கவனம் முழுக்க சிதறுகிறது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தடை உத்தரவை செயல்படுத்தும் விதமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களின் கவனம் சிதறும். எனவே வகுப்பறையில் பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களும் இந்த உத்தரவை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : தினகரன்

1 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி.iam come back dubai

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!