உடலில் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இத்தகைய சிறுநீரகத்தின் செயல்பாடு கற்கள் உண்டாவதால் தடைபடுகிறது.
இந்த கற்கள் உருவாவதற்கு ஒருசில கெமிக்கல்களான யூரிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஆக்ஸாலிக் ஆசிட் போன்றவை திரள்வதால் உண்டாகின்றன.
இத்தகைய கெமிக்கல்கள் சேர்வதற்கு காரணம் அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது, கனிமங்களின் குறைபாடு, உடல் வறட்சி, முறையற்ற உணவுமுறை மற்றும் பல. சிறுநீரக கற்கள் உருவானால் கடுமையான வலி ஏற்படும். இந்த சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் அடிக்கடி அல்லது வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது, குமட்டல், வாந்தி மற்றும் அசாதாரணமாக வியர்ப்பது போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.
இவ்வாறு உருவாகும் சிறுநீர் கற்களை இயற்கை முறையில் கூட எளிமையாக வெளியேற்றலாம். இப்போது அந்த சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில்.
டான்டேலியன் வேர்.
சிறுநீரகப் பாதையை சுத்தப்படுத்துவதில் சிறந்த ஒரு பொருள் தான் டான்டேலியன் வேர். ஆகவே 500 மில்லி கிராம் டான்டேலியன் வேரைக் கொண்டு டீ போட்டு குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் வலி குறைந்து, சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்
காராமணி.
காராமணியை 6 மணிநேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களால் உண்டாகும் வலி குறைந்து, கற்களும் கரைந்துவிடும்.
ஹார்ஸ்டெய்ல் (Horsetail).
மூலிகை கடைகளில் கிடைக்கக்கூடிய ஹார்ஸ்டெய்ல் மூலிகையை டீ போட்டு, தினமும் 4 கப் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
மாதுளை ஜூஸ்.
மாதுளையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும்.
செலரி (Celery).
சிறுநீரக கற்களின் அறிகுறிகள் தென்பட்டால், செலரி கீரையை உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம். மேலும் இது சிறுநீரக கற்கள் இருந்தாலும் கரைத்துவிடும்.
துளசி.
துளசி டீயை அதிகம் குடித்து வர, சிறுநீரக கற்கள் கரையும்.
தர்பூசணி.
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதனை சாப்பிட்டால், சிறுநீரக கற்களில் இருந்து விடுபடலாம்.
திராட்சை.
திராட்சையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் குளோரைடு அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
தண்ணீர்.
போதிய தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தால் இரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் போய்விடும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
பிரான் ப்ளேக்ஸ்.
நார்ச்சத்து அதிகம் நிறைந்த பிரான் ப்ளேக்ஸை தினமும் உட்கொண்டால், அது சிறுநீரில் உள்ள அதிகப்படியான கால்சியம் இருப்பதை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
நெட்டில் இலை.
நெட்டில் இலை, பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் தண்ணீர் சீராக பாய்வதை பராமரித்து, அங்கு கற்கள் உருவாவதை தடுப்பதோடு, பாக்டீரியாக்களையும் வெளியேற்றிவிடும்.
2 comments:
செலரி கீரை எங்கு கிடைக்கும் அது எப்படி இருக்கும் 9965478321
எந்த பதிவிலும் செலரி கீரை எங்கு கிடைக்கும் என்ற பதிவு இல்லை.இது இங்கு விளைவதாகவும்தெரியவில்லை.தயவு செய்து எங்கே கிடைக்குமென கூறவும். நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!